Witness

இவ்வளவு பெருமளவில் மக்கள் வேதசாட்சி அந்தோணி கிரிமினாலி இரத்தம் சிந்திய இப்புண்ணிய பூமிக்கு வந்திருப்பதற்கு காரணம் மறைசாட்சி வழியாக நீங்கள் அனுபவிக்கின்ற புதுமைதான் என உணர்கின்றேன். இம்மறைசாட்சி வழியாக விரைவில் புதுமைகளைப் பெற்று சாட்சி கூறுங்கள்.

மேதகு ஆயர்.சூசைமாணிக்கம்.
சிவகங்கை மறைமாவட்டம்.

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இயேசுவின் நாமத்திலும், வண.அந்தோணி கிரிமினாலி நாமத்திலும் ஆசிரும் வாழ்த்துக்களும் வண.அந்தோணி கிரிமினாலியின் புகழையும், அவரது பரிந்துரையால் நடைபெறும் புதுமைகளையும், அனுபவிப்பதும், எடுத்துரைப்பதும் நமது கடமை. இயேசுவைப் போல மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்று அறை கூவல் விடுத்து கடற்கரைப் பகுதிகளிலும், பட்டி தொட்டிகளிலும் எல்லாம் நடந்து சென்று கிறிஸ்துவை அறிவித்து, நம் விசுவாச வாழ்வை பலப்படுத்தி, கிறிஸ்துவுக்காக தன் இரத்தத்தைச் சிந்தியவர் நமது மறைசாட்சி வண.அந்தோணி கிரிமினாலி, இவர் சிவகங்கை மறைமாவட்டத்தின் முதல் மறைசாட்சியும், இந்தியாவின் இரண்டாவது மறைசாட்சியுமாவார். தொன்று தொட்டு இன்றுவரை அற்புதங்களும் அதிசயங்களும், புதுமைகளும், அரும்பெறும் வல்ல செயல்களும் இவரது திருத்தலத்தில் நடைபெறுவது கண்கூடு. நீங்களும் இத்திருத்தலத்திற்கு வாருங்கள். துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்று சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அருளையும் ஆசிரையும் பெற்றுக்கொள்ளுங்கள். வாருங்கள் வளம் பெறுங்கள்.

அருள்பணி. A.அருள்சந்தியாகு
பங்குதந்தை
வேதாளை..

Fr M.A. Thamburaj
Arch Bishop’s House, Madurai
on14th may 1984

I felt mild heart attack on 26th March 1984 at 8AM., It was certified by Dr.Nirmala MBBS and Dr.Annamalaisamy Heart specialist. I took medicines.
But I remember ven. Antonie criminalie and begged him for quick recovery .
What a surprise, It is really wonder. I got free from that within a short on 12th may 1984 Dr.Aravindaraj advised me to stop the medicines. Immediately I ran to Vedalai and said thanks giving mass.
If I forget ven.Antonie criminalie surely I will be an ungrateful one.                                                                                              

Fr M.A. Thamburaj

Within 8 days Prayer of Ven.Antonie criminalie, I got back my money about one Lakh
from one by whom I was deceived for past 10 months.

Thanks a lot to Ven.Antonie criminalie.
Hail Ven.Antonie criminalie

S.Arcokiasamy
Sekkakudi
10th Nov 2011

திருமதி மரியசாந்தி - பாம்பன்

மறைசாட்சி வழியாக வாய் மற்றும் நாக்கிலிருந்த ஆறாத புண் பூரண சுகம் கிடைத்ததற்காக
வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி

திருமதி சகாயம் பீட்டர் - பரமக்குடி

தாய்க்கு ஏற்பட்டிருந்த புற்று நோய்க்கட்டி என்று சந்தேகிக்கப்பட்ட கட்டியை கரையச்செய்தமைக்காக
வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி.நிர்மலா தேவி – மண்டபம்

மூல நோயிலிருந்து பரிபூரண சுகம் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திரு மரியதாஸ் - மண்டபம்

நீண்ட நாள் குழந்தையில்லாமல் மறைசாட்சி வழியாக வேண்டிய பின் ஆண் குழந்தை கிடைக்கப்பெற்று அக்குழந்தைக்கு மறைசாட்சி பெயரிட்டு மகிழச் செய்தமைக்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி அபூர்வம்- தங்கச்சி மடம்

மறைசாட்சியின் புதுமையினால் என் கணவர் குடிப் பழக்கத்திலிருந்து விடுபட்டதற்காக
வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி சகாயராணி

3 வருடமாகக் குணப்படுத்த முடியாமலிருந்த இரத்தப்போக்கு நோயிலிருந்து பூரணம் சுகம்
கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி.பிலிப் அன்னம்மாள்

மறைசாட்சி வழியாகக் கட்டு விரியன் பாம்பு கடியிலிருந்து உயிரைக் காப்பாற்றியதற்காக
வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி

திரு. தியாகராஜன் செல்வராணி (இந்து சகோதரர்)

என் மகன் காமேஸ்வரன் சிறிது தூரம் கூட நடப்பதற்கு இயலாது. வேத சாட்சியிடம் வேண்டிய
பிறகு இப்பொழுது நன்றாக நடக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளான்.

திரு. ரோட்ரிக்ஸ் அல்போன்சா மண்டபம் கேம்ப்

என் மகளுக்கு பல வருடமாக வரன் பார்த்து கிடைக்காத நிலையில் வேத சாட்சியின் புதுமையினால்
அரசு வேலை பார்க்கும் மணமகன் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திரு. ஆரோக்கியசாமி - செக்ககுடி.

முதல் நாள் மாலையிலும் மறுநாள் மாலை முதல் இரவு 3 மணி வரை பாதம் முதல் முழங்கால் வரை
தீராத அரிப்பு ஏற்பட்டு தூங்கமுடியாமல் படுக்கையில் அழுது கொண்டு வேறு வழியின்றி வண.
அந்தோனி கிரிமினாலி படத்தை எடுத்துக் கொண்டு வந்து பாதம் முதல் முழங்கால் வரை படத்தை வைத்து தந்தையே எனக்குக் கிடைக்காத கிடைக்க முடியாத ரூபாய் 1 லட்சத்தையே வாங்கிக் கொடுத்தீர்களே இந்த அரிப்பையும் குணப்படுத்துங்களே என்று வேதனையுடன் கூறியபடி தூங்கிவிட்டேன். அரிப்பும் நின்று விட்டது. நிரந்தரமாக நின்று விட்டதா என்பதை சோதிப்பதற்காக தொடர்ந்து 7 நாட்கள் குளிக்காமல் இருந்தேன். இன்றுவரை அந்த அரிப்பு வரவில்லை. ஆகவே வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி ராஜரீகம் (தலைமையாசிரியர்) பாண்டியன்நகர் - மானாமதுரை

என்னிடம் ஒருவர் இடம் தருவதாகக் கூறி பணம் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் பணமும்
குடுக்கவில்லை. இடமும் கொடுக்கவில்லை. என்னால் கேட்டுப் பெறவும் முடியவில்லை. 2011 அக்டோபர் மாதம் சிவகங்கை மறைமாவட்ட பத்திரிக்கை ஆனந்த கங்கை தூதில் வண.அந்தோனி கிரிமினாலி படம் ஒன்று இருந்து பார்த்து அதைப் பத்திரமாக என் பெட்டியில் வைத்து விட்டேன். அடுத்த மாதம் நவம்பர் பத்திரிக்கையில் வாசகர் பகுதியில் செக்ககுடி ஆரோக்கியசாமி ஆசிரியருக்கு தந்தை கிரிமினாலி படம் கிடைத்தவுடன் ஜெபித்துக் கிடைத்த புதுமையை படித்துப்பார்த்து அதற்கு பிறகு பத்திரமாகப் பெட்டியில் வைத்திருந்த தந்தையின் படத்தை எடுத்து நானும் என்னுடைய இழந்த பணத்தை பெற்றுத் தர வேண்டி ஜெபித்தேன். ஒரு வாரத்திற்குள்ளாக என்னிடம் பணத்தைக் கொடுக்க மறுத்த அதே நபர் அவராகவே வந்து உன் பணத்தை இதோ பெற்றுக் கொள் என்று கொடுத்துச் சென்றார். நான் உடனே வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி கூறிவிட்டு உடனடியாக வேதாளை பங்குத் தந்தைக்கு போனில் சொல்லிவிட்டேன்.

திரு.பாலசுந்தர ராஜா – மதுரை

நான் ஒரு இந்து வைணவ மதத்தைச் சார்ந்தவன். மதுரை மாநகராட்சியில் பணியாற்றி வருகிறேன்.
எனக்கு பல ஆண்டுகளாக திருமணத்திற்கு வரண் கிடைக்கவில்லை. மணமுடைந்தேன். வேதனையின் விளிம்பிற்கே சென்றேன். அந்த நேரத்தில் எனது நண்பர் மைக்கேல் வண.அந்தோனி கிரிமினாலி அவர்களின்
படத்தைக் கொடுத்து இவரிடம் உங்கள் கருத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொன்னார்.
மன்றாடினேன். 10 நாட்களுக்குள்ளாக அரசு பணிபுரியும் வரண் கிடைக்கப் பெற்று திருமணப் பத்திரிக்கையோடு வேதாளை ஆலயம் சென்று சாட்சியம் கூறினேன். மார்ச் 28 அன்று எனது திருமணம் நடைபெற்றது. வண.அந்தோனி கிரிமினாலியின் புகழ் ஓங்குக.

திரு. அருள் ஜெகநாதன் - மதுரை 8526182270

எனக்கு 2004 ஆம் ஆண்டிலிருந்து முதுகில் ஏற்பட்ட வலியால் இரவு நேரங்களில் முழுவதுமாக தூங்க முடியாது. வீட்டின் உள்ளேயே நடந்து கொண்டிருப்பேன். டாக்டர் இராஜகோபால் M.B.B.S என்பவரிடம் பல காலமாக வைத்தியம் செய்தேன். ஊசி மாத்திரை எடுத்துக் கொள்ளும் நேரம் கொஞ்சம் நன்றாக இருக்கும். திரும்ப தூக்கம் வராது. ஒரு சிலரின் தவறான யோசனையால் தூக்கம் வரும் என்பதற்காக மது அருந்தி பார்த்தேன். வேதனை தான் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் தான் திரு.மைக்கேல் என்பவர் மூலம் பெற்றுக் கொண்ட அந்தோணி கிரிமினாலி அவர்களின் படத்தை என்னோடு வேலை பார்க்கும் எனது நண்பர் குழந்தைராஜின் சட்டைப்பையில் பாதிப்படமாகப் பார்த்தேன். இது யார் சவேரியாரா எனக்கேட்டேன். அதற்கு அவர் இந்தியாவின் இரண்டாவது வேதசாட்சி என்று கூறி படத்தைக் கொடுத்தார். அந்த நிமிடமே படத்தை வாங்கித் தொட்டுக் கும்பிட்டு முக்தி செய்தேன். அப்பொழுதே எனக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி தீர உங்கள் புதுமை செய்யும் வரத்தை பயன்படுத்தி எனக்கு உடனடியாக மருத்துவத்தில் நிற்காத வலியை உடனே நிறுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அன்று இரவு அவரை நினைத்து மன்றாடி உறங்கச் சென்றேன். என்ன ஆச்சர்யம்! காலை 6 மணிக்குத் தான் கண் விழித்தேன். இப்படி ஒரு நல்லத் தூக்கம் தூங்கி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது.
என்னையே என்னால் நம்ப முடியவில்லை. இன்று வரை எனக்கு எந்த குறைவும் இல்லை. எல்லாவற்றிற்கும் வணக்கத்திற்குரிய தந்தை அந்தோனி கிரிமினாலி எனக்குப் புதுமை செய்து கொண்டிருப்பது தான் காரணம் என்பதை சப்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

திரு.செபஸ்டின் ஆனந்தூர்.

என் மகனுக்குப் பிறந்தது முதல் இருந்து வந்த வயிற்று வலி மறைசாட்சியின் வேண்டுதலால் புதுமையாகக் குணம் பெற்றதற்கு வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி. ரோஸ்லின் பால்ராஜ் - காளையார்கோவில்.

சீர்திருத்தப்படாமல் இருந்த நிலம் மறைசாட்சியிடம் வேண்டுதல் செய்த பிறகு பிரச்சனை தீர்ந்து நிலம் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி வித்யா ராஜா – காளையார்கோவில்

மறைசாட்சியின் புதுமையால் சுகப்பிரசவம் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திருமதி . மரிய கேஸி தங்கச்சிமடம்

மறைசாட்சியின் புதுமையால் ஆண்குழந்தை பாக்கியம்
கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திரு. பிசில்லா பாபு

மறைசாட்சியின் புதுமையால் சுகப் பிரசவம் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

திரு சாலமன் - பாம்பன்

மறைசாட்சியின் புதுமையினால் இதய நோய் இருந்த அடையாளம் தெரியால் பூரண சுகம் கிடைத்ததற்காக வண.அந்தோனி கிரிமினாலிக்கு நன்றி.

V.N. அடைக்கலம் ஜோசிதாஸ் - பாம்பன்

பல ஆண்டுகள் எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் மறைசாட்சியிடம் வேண்டுதல் வைத்ததன்
பயனாக மறைசாட்சியின் புதுமையால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அந்தோனி கிரிமினாலி மான்சிஸ் என்று பெயர் வைத்து நன்றியை செலுத்தியுள்ளோம்.

திரு. R.கென்னடி மரிய கிரேஸி – தங்கச்சிமடம்

பல ஆண்டுகளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் வண. அந்தோனி கிரிமினாலியின் கிருபையால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அந்தோனி கிரிமினாலி செண்டின் என்று பெயர் வைத்து நன்றியை செலுத்தினோம்.

X. பென்னட் ஆக்னஸ் 3/730 குத்தூஸ் காம்பவுன்ட் உச்சிப்புளி

12.06.11 ஞாயிறு காலை 6.15 மணிக்கு திருப்பலிக்குச் செல்ல நானும் என் மகன் ரால்ஃப்
ஜெரால்டும் தயாரானோம். திடீரென்று என் மகன் தனது வலது கை கால் செயல் இழந்து தடுமாறி தரையில் சாய்ந்து விட்டான். எழ முடியவில்லை. உடனே நான் வண.அந்தோனி கிரிமினாலி அவர்களின் படத்தை எடுத்த கண்ணீரோடு ஜெபித்து அவனது தலை முதல் கால் வரை தேய்த்து எடுத்தேன். என் மகன் வாலிபன் எழுந்து நடமாட வேண்டுமென்றும் உமக்கு சாட்சி சொல்ல சந்தர்ப்பம் தாருமையா என்று வேண்டினேன். 30
நிமிடங்களுக்குப் பின் என் மகன் எழுந்து நின்றான். தந்தையின் புதுமையை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்டோம். தந்தைக்கு அன்று முதல் இன்று வரை நன்றி கூறிக்கொண்டே இருக்கின்றோம். என் மகனும் இன்று வரை நன்றாக் இருக்கின்றான்.
வண.அந்தோனி கிரிமினாலி ஐயாவிற்கு நன்றி. கோடான கோடி நன்றி.

A. அழகு (இந்து) செக்ககுடி.

எனது பேரன் ரிஷி மூளை வளர்ச்சி இல்லாதவன் போல யுடிழெசஅயட ஆக நடந்து வந்தான். அவனை எனது மகள் வீட்டில் வைத்திருக்க முடியாமல் மகள் வழி பேரன் என்பதால் எங்கள் வீட்டில் எங்கள் பராமரிப்பில் இருந்து வந்தான். நாங்களும் அவனுடைய சேஷ்டைகளைக் கண்டு வேதனை அடைந்தோம். வேறு வழியில்லாத நிலையில் எங்கள் ஊர் ஆசிரியர் ஆரோக்கியசாமியிடம் இதைப் பற்றி வேதனையோடு பேசிக் கொண்டிருந்தேன். அவரும் அதான் சாமி படம் (அந்தோனி கிரிமினாலி) உன்னிடம் இருக்கிறதல்லவா? அந்த படத்தை வைத்து இவனுக்காக ஜெபம் செய். சரியானவுடன் வேதாளை வந்து சாட்சி சொல்லி பேரனுக்கு மொட்டை அடித்து வருகிறேன் என்று வேண்டிக் கொள் என்று சொன்னார். நானும் அதைப் போலவே நினைத்துக் கொண்டு ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். என்ன அதிசயம்! 3 ம் நாளிலேயே அவன் துஷ்ட குணத்திலிருந்து அமைதியான வழிக்கு மாறிவிட்டான். நானும் 5ம் நாளில் அதே ஆசிரியரைப் பார்த்து எப்பொழுது கோவிலுக்குப் போகலாம் என்று கேட்டேன். அதற்கு நன்றியாக வன.அந்தோனி கிரிமினாலி சாமியின் படம் 1000 எனது சொந்த செலவில் அச்சடித்து வைத்துள்ளேன். விரைவில் அதை கோவிலில் சென்று கொடுத்து விட்டு என் பேரனுக்கு மொட்டை அடித்து கோவிலில் சாட்சியம் சொல்லி விட்டு வருவேன் என்று சாட்சியம் கூறுகிறேன்.